உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேலிட பொறுப்பாளர் சொன்னது இதுதான்

மேலிட பொறுப்பாளர் சொன்னது இதுதான்

மேலிட பொறுப்பாளர் சொன்னது இதுதான் தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 மெஜாரிட்டி கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆதரவை நாட விஜய் திட்டமிட்டுள்ளார் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதில் அளித்தார். இந்த தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அலை வீசியது. இளைஞர்​கள் மற்​றும் பெண்​களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்​துள்ளது. தேர்தலின்போதே தவெகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று காங்கிரசாருக்கு அறிவறுத்தி இருந்தேன். தவெகவில் இருந்து இதுவரை யாரும் எங்களை யாரும் தொடர்பு கொள்ள வில்லை. மதச்சார்பற்ற கட்சியான தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பலரும் என்னை தொடர்பு கொள்கிறார்கள். இதுகுறித்து கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டு மேலிடத்திற்கு அனுப்பப்படும். காங்கிரஸ் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை