பேசிக்கொண்டிருந்தபோதே மைக் ஆப் ஆன தருணம் Nirmala| Finance Minister| Parliament | Economic survey |
நிர்மலா அடித்த கமென்ட் லோக்சபாவில் சிரிப்பலை பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். பின், எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பேசினார். அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மைக் ஆப் ஆகி பின் ஆன் ஆனது. உடனே சபாநாயகரை பார்த்து, சபாநாயகர் அவர்களே எதிர்க்கட்சியினர் தங்கள் மைக் மட்டும் தான் ஆப் ஆகிறது என கூறி வந்தனர். என் மைக்கும் ஆப் ஆகிறது. இப்போது எதிர்க்கட்சியினருக்கு சந்தோஷமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார். நிர்மலாவின் பேச்சைக் கேட்டு எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து எம்பிக்களும் சிரித்தனர். இதனால் சற்று நேரம் சபையில் சிரிப்பலை நிலவியது. பின் அமைச்சர் தன் பேச்சை தொடர்ந்தார்.