உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனி என்ன பேசினாலும் பதிலடி தான் | Nirmala Sitharaman | L.Murugan | Union Ministers | Bjp | DMK

இனி என்ன பேசினாலும் பதிலடி தான் | Nirmala Sitharaman | L.Murugan | Union Ministers | Bjp | DMK

திமுகவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் மத்திய அமைச்சர்கள் பாஜ அதிரடி திட்டம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோழமை கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்துள்ளது. எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால் கடந்த பார்லிமென்டில் இருந்தது போல, அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். இனி பார்லிமென்ட் கூட்டத்தொடர் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும் என்பதை, நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடர் உணர்த்தி விட்டது. லோக்சபாவில் திமுகவின் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்பது எம்.பிக்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது. இதனால், எதையும் சமாளிக்க பா.ஜவில் திட்டங்கள் தயாராகி வருகின்றன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். அப்போது பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவுக்கு வந்து மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். தமிழகத்தில் தான் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பிக்கள் அனைவரும் கூச்சலிட்டனர். பா.ஜ சீனியர் தலைவர்கள், சரியான பதிலடி என நிர்மலாவை பாராட்டினர்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !