மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் முதல்வர் நிதீஷ்! JDU | Nithish Kumar | CM Bihar
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆந்திராவின் தெலுங்கு தேசமும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் முக்கியமான ஆதரவு கட்சிகளாக உள்ளன. தெலுங்கு தேசத்துக்கு லோக்சபாவில் 16 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்களும் உள்ளனர். இவ்விரு கட்சிகளின் ஆதரவில் மத்திய அரசு நீடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இவ்விரு கட்சிகளும் மத்திய அரசிடம் இருந்து நிறைய உதவிகளை பெற வேண்டும் என திட்டமிட்டு வருகின்றன. ஐக்கிய ஜனதாதளம் கட்சி பீகாருக்கு சிறப்பு மாநில தகுதி வழங்க வேண்டும் என 2011 முதல் கேட்டு வருகிறது. கடந்தாண்டு கூட சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு இந்த கோரிக்கை குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் பேசி வருகின்றனர்.