உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கருணாநிதி சொன்னது என்ன? | One Nation One Election | KarunanidhiSupport

நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கருணாநிதி சொன்னது என்ன? | One Nation One Election | KarunanidhiSupport

பார்லிமென்ட்டுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் வலியுறுத்தி வருகிறார். அப்போதில் இருந்தே தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போதும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அனுமதிக்க மாட்டோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இருப்பினும் நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய அரசு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிபுணர் குழு அமைத்தது. இந்த குழு பல தரப்பிலும் கருத்துகளை கேட்டு, கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. புதனன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை