/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பார்லிமென்ட் நடப்பு கூட்டத்தில் மசோதா தாக்கல் ஆக வாய்ப்பு | One Nation One Election Bill
பார்லிமென்ட் நடப்பு கூட்டத்தில் மசோதா தாக்கல் ஆக வாய்ப்பு | One Nation One Election Bill
நாடு முழுதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வசதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சர் அவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கி வருகின்றனர். வரும் 20ம் தேதியுடன் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைகிறது. அதற்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்து, அதை சட்டமாக இயற்றுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
டிச 12, 2024