பாக் அணு ஆயுத மிரட்டல் இந்தியாவிடம் எடுபடாது: மோடி | Operation Sindoor | PM Modi | Pakistan
ஆபரேஷன் சிந்தூர் குறித்து லோக்சபாவில் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியதாவது நமது தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பஹவல்பூரும், முரிட்கே முகாமும் தரைமட்டமாக்கப்பட்டன. பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் என்பது பொய்யானது. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அணு ஆயுத மிரட்டல் எல்லாம் இனி இந்தியாவிடம் எடுபடாது. இந்த போரில் இந்தியா தனது தொழில்நுட்ப திறனைக் காட்டியுள்ளது. அது பாகிஸ்தானின் மார்பில் துல்லியமாகத் தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் விமான தளங்களும் சொத்துக்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இன்றுவரை, அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த போரின் காலம். கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆயுதங்களை தயாரிக்காமல் இருந்திருந்தால், இந்த தொழில்நுட்ப காலத்தில் நிறைய இழப்பை சந்தித்திருப்போம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக முதல் முறையாக இந்த உலகம் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை பார்த்திருக்கிறது. அதன் ஆற்றலை அங்கீகரித்து இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தி விட்டன என பிரதமர் மோடி கூறினார்.