உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரமோஸ் ஏவுகணை கேம் சேஞ்சர் ஆன கதை ind vs pak | pahalgam | brahmos missile | Modi vs Shehbaz Sharif

பிரமோஸ் ஏவுகணை கேம் சேஞ்சர் ஆன கதை ind vs pak | pahalgam | brahmos missile | Modi vs Shehbaz Sharif

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் எல்லா வகையிலும் இந்தியாவின் கை ஓங்கி இருந்தது. இருப்பினும் பாகிஸ்தானை 4 நாளில் வீழ்த்திய அஸ்திரம் என்றால் அது பிரமோஸ் ஏவுகணை தான். மே 9 இரவு மே 10 விடியலுக்கு இடையே 15 பிரமோஸ் ஏவுகணைகளை வைத்து பாகிஸ்தானை இந்தியா துல்லியமாக தாக்கியது. இதில் பாகிஸ்தானின் முக்கியமான விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்கள் நொறுக்கப்பட்டன. இந்த அடி பாகிஸ்தானை கதற வைத்தது. இதற்கு மேல் சண்டை செய்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதை உணர்ந்து தான் பாகிஸ்தான் சமாதான கொடியை பறக்கவிட்டது. இந்த நிலையில் தான் முதல் முறையாக பிரமோஸ் ஏவுகணை பற்றி இரு நாட்டு பிரதமர்களும் மவுனம் கலைத்து இருக்கின்றனர். பிரமோஸ் கொடுத்த அடியை நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கதறலுடன் ஒப்புக்கொண்டார். முதல் முறையாக இப்போது பிரமோஸ் ஏவுகணையை வைத்து நாம் என்ன செய்தோம் என்பதை நம் பிரதமர் மோடி கம்பீரத்துடன் சொல்லி இருக்கிறார்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை