பன்னீர்செல்வத்திடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தல் | Panneerselvam | AIADMK | BJP alliance
அதிமுக பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியில் நீடிக்க முடியாத நிலைக்கு ஆளான பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்பி தர்மர் உள்ளனர். லோக்சபா தேர்தலில், தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளரை விட அதிக ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். 2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜ தலைமை, பன்னீர்செல்வம், தினகரனின் அமமுகவை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுத்தது. அதற்கு பழனிசாமி ஒப்புக் கொள்ளாததால், பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.