அதானி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை கேட்டு அமளி | Parliament | Lok sabha | PM Modi
எதிர்கட்சிகளின் பிடிவாதம் முடங்கும் பார்லிமென்ட் 11வது நாளாக முடக்கம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ல் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் தொடர்ந்துள்ள ஊழல் வழக்கு குறித்தும், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பலில் நடந்த கலவரம் குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தும் ஏற்கப்படாததால், கடும் அமளியால் முதல் நாளில் இருந்து எந்த அலுவலும் நடக்காமல் பார்லிமென்ட் முடங்கி இருக்கிறது. கடைசியாக வெள்ளியன்றும் இதே பிரச்னைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதானி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.