காங்-பாஜவினர் பயங்கர மோதல்-பகீர் காட்சிகள் patna bjp congress clash | bihar election | viral video
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அங்கு பிரசார களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் கமிஷனை கண்டித்து ராகுல் நடத்திய ஊர்வலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊர்வலத்தின் போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை மிகவும் கீழ்த்தரமாக பேசிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்பங்காவில் இருந்து முசாபர்பூருக்கு ராகுல், பிரியங்கா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் டூவீலரில் சென்றனர். ஊர்வலம் துவங்கிய தர்பங்காவில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்து தான் அந்த நபர் மோடியையும் அவரது தாயாரையும் பேசி இருந்தார். இதற்கு காங்கிரசும் ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று பாஜவினர் நடத்தினர். கொடிகளுடன் காங்கிரஸ் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஏற்கனவே கொடிகளுடன் காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். இரு கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கொடிகள் கட்டி இருந்த கம்புகளை எடுத்து 2 தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக அடித்தனர். மாறி மாறி கல்வீச்சில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்றிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். அந்த இடமே கலவரக்காடாக மாறியது. உச்சக்கட்ட பதற்றம் தொற்றியது. போலீசார் லத்தி சார்ஜ் செய்தனர். இரு கட்சியினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த அசம்பாவித சம்பவத்துக்கு ஒருவர் மீது இன்னொருவர் பழி போட்டனர். முதலில் காங்கிரசார் கற்களை வீசியதால் தான் மோதல் வெடித்தது என்று பாஜவினர் கூறுகின்றனர். முற்றுகையிட வந்த பாஜவினர் கற்களை வீசியதால் தான் பதற்றம் தொற்றியது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மோடி மற்றும் அவரது தாயார் பற்றி காங்கிரஸ் தொண்டர் பற்றி பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் ஒதுங்கிக்கொண்டது. அந்த நபர் பேசியதற்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஏற்கனவே கூறியது. இன்னொரு பக்கம், அவதூறாக பேசிய முகமது ரிஸ்வி என்ற ராஜாவை தர்பங்கா போலீசார் கைது செய்தனர். அவர் இப்போது சிறையில் இருக்கிறார். இருப்பினும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நீடிக்கிறது. #BJPVsCongress #CaughtOnCam #PatnaChaos #Lathis #StonePelting #PoliticalConflict #BJPvsCongress #IndiaPolitics #BreakingNews #ShockingVideo #CurrentEvents #CivicDisorder #PatnaNews #PoliticalTension #ViolenceInPatna #SocialUnrest #ProtestsInIndia #NewsUpdate