உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக எதிர்ப்பு அரசியல் இதற்காகவா? | Pawan Kalyan | Janasena party | Andhra Deputy CM

திமுக எதிர்ப்பு அரசியல் இதற்காகவா? | Pawan Kalyan | Janasena party | Andhra Deputy CM

தமிழகத்தில் ஜனசேனா கட்சி துவக்க பவன் கல்யாண் ஆலோசனை! தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், 2014ல் ஆந்திராவில் ஜனசேனா கட்சியை துவக்கினார். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜ தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் கூட்டணி அரசில் துணை முதல்வரானார். இப்போது தமிழகத்தில் ஜனசேனா கட்சியை வளர்க்க பவன் கல்யாண் விரும்புகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திமுக எதிர்ப்பு அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை எதிர்த்து பேசியதை கடுமையாக கண்டித்தார். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு ஹிந்தியை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை