உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரிவினைவாத அமைப்புடன் கை கோர்த்தது காங்கிரஸ் | Pinarayi Vijayan | wayanad | Priyanka

பிரிவினைவாத அமைப்புடன் கை கோர்த்தது காங்கிரஸ் | Pinarayi Vijayan | wayanad | Priyanka

கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் அக்காட்சி தேசிய பொது செயலாளர் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜவின் நவ்யா ஹரிதாஸ் களத்தில் உள்ளனர். இதனால் வயநாடு இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதரவுடன் வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார். ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிராக அந்த அமைப்பின் சித்தாந்தம் உள்ளது. ஜமாத் அமைப்பினருக்கு ஒரே ஒரு கொள்கை தான். ஜனநாயக முறையிலான அரசை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அதுதான் அவர்களின் சித்தாந்தம். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதரவை பெற்றுள்ளதன் மூலம் மதச்சார்பின்மை என்ற காங்கிரசின் முகமூடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த அமைப்பு சதி வேலைகளை செய்தது. மதச்சார்பின்மைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைத்து விதமான மதவெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத் இ இஸ்லாம் அமைப்பின் ஓட்டுகள் வேண்டாம் என காங்கிரசால் சொல்ல முடியுமா? என பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி ஜமாத் இ இஸ்லாமின் காஷ்மீரி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை