உலக சந்தையில் போட்டி போட தயாராகும் பீகாரின் சூப்பர்ஃபுட் | PM Modi | Farmers products | Every kitche
பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். உலகின் ஒவ்வொரு சமையலறையிலும், இந்திய விவசாயிகளால் உற்பத்தி செய்த ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது எனது கனவு. இந்த ஆண்டு பட்ஜெட்டும் அதை முன்னெடுத்து சென்றுள்ளது. பட்ஜெட்டில் பி.எம். தன் தான்ய யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பயிர் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் கண்டறியப்படும். பின் அங்கு சிறப்பு முகாம்கள் நடத்தி விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் முயற்சிகளால், இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலை பெறத் தொடங்கி உள்ளனர். பல விவசாய பொருட்கள் முதல் முறையாக ஏற்றுமதி ஆக தொடங்கி உள்ளன. இப்போது பீகாரில் இருந்து கிடைக்கும் மக்கானாவின் முறை. இது ஒரு சூப்பர்ஃபுட். இது இப்போது உலக சந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மக்கானா விவசாயிகளுக்காக மக்கானா வாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நானும் ஆண்டு முழுவதும் மக்கானாவை சாப்பிடுகிறேன். முன்பு வெள்ளம், வறட்சி, ஆலங்கட்டி மழை போன்ற சமயத்தில் முந்தைய அரசுகள் விவசாயிகளை அப்படியே விட்டு விட்டனர். 2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை நீங்கள் தேர்ந்தெடுத்த பின்,பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கினோம். இந்த திட்டத்தின் கீழ் பேரிடர் காலங்களில் விவசாயிகள் 1.75 லட்சம் கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர். விவசாயத்திற்காக காங்கிரஸ், ஆர்ஜேடி வைத்துள்ள மொத்த பட்ஜெட்டை விட பல மடங்கு அதிக பணத்தை மக்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி உள்ளோம். இதை எந்த ஊழல்வாதியும் செய்ய முடியாது. விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசால் மட்டுமே செய்ய முடியும். காங்கிரஸாக இருந்தாலும் சரி, ஜங்கிள் ராஜ் அரசாக இருந்தாலும் சரி, மக்களாகிய உங்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு பெரிதில்லை.