உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களின் பைகளை நிரப்பும்; சேமிப்பை உயர்த்தும் பட்ஜெட் pm modi | union budget

மக்களின் பைகளை நிரப்பும்; சேமிப்பை உயர்த்தும் பட்ஜெட் pm modi | union budget

பட்ஜெட்டில் விவசாய துறைக்கான அறிவிப்புகள் புதிய புரட்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பட்ஜெட்140 கோடி இந்தியர்களின் விருப்பங்களின் பட்ஜெட். ஒவ்வொரு இந்தியரின் கனவை நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக பல துறைகளில் வாய்ப்புகளை திறந்துள்ளோம். மக்களின் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கும் பட்ஜெட் இது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்துகிறேன். பொதுவாக, பட்ஜெட்டின் கவனம் அரசின் கருவூலத்தை நிரப்பும் வகையில்தான் இருக்கும். ஆனால், இந்தபட்ஜெட் அதற்கு நேர்மாறானது. மக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் பங்களிப்பவர்களாக இருக்கவும் அடித்தளமிட்டு இருக்கிறது. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை உறுதி செய்யும். வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. 50 சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஹோட்டல்கள் கட்டப்படும். முதல் முறையாக, ஹோட்டல்களை உள்கட்டமைப்பு வரம்பில் கொண்டு வருவதால் சுற்றுலா மேம்படும். விவசாய துறைக்கான அறிவிப்புகள் கிராமப்புற பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். வருமான வரிச்சலுகைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பலனளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !