உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை | PM Modi Emotional Speech | Bihar | Congress | RJPD

எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை | PM Modi Emotional Speech | Bihar | Congress | RJPD

பிரதமர் மோடி பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத பாஜ தலைவர் பீகாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் பேரணி சென்றார். தர்பங்காவில் யாத்திரையின் போது, சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானது. இந்த சூழலில் பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி இன்று பேசினார். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்து விட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர். என் தாய் இப்போது என்னுடன் இல்லை. நீங்கள் உணர்ந்திருக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என மோடி உணர்ச்சி பொங்க பேசினார். அவரது பேச்சை கேட்டு பலரது கண்கள் குளமாகியது. பிரதமர் மோடி பேசுவதை பார்த்து பீகார் பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உடைந்து போய் அழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை கணமாக்குகிறது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை