எம்ஜிஆர் பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! MGR Birthday | Modi birthday wishes for MGR
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். எம்ஜிஆர் தி கிரேட் என்ற பெயரில் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசியதுடன், அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துவதாகவும் கூறியுள்ளார். எம்ஜிஆரின் மக்கள் நல பணிகள் நம்மை மிகவும் ஈர்த்துள்ளன. சுகாதாரம், கல்வி, மகளிர் மேம்பாட்டில் அவர் காட்டிய அக்கறை அதற்காக அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். குடும்ப பின்னணி இல்லாமல் திறமையால் முன்னேறியவர் எம்ஜிஆர். இதனால் தான் அவர் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு வழிவகை செய்தார். இதனால் தான் இன்றும் மக்கள் அவரை ஆகச்சிறந்த தலைவராக போற்றுகின்றனர். நான் அவரை வணங்கி மகிழ்கிறேன் என பிரதமர் மோடி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.