உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாமகவை விட்டு அன்புமணியை நீக்க ராமதாஸ் திட்டமா: மூத்த தலைவர் | PMK | Dr Ramadoss | Anbumani

பாமகவை விட்டு அன்புமணியை நீக்க ராமதாஸ் திட்டமா: மூத்த தலைவர் | PMK | Dr Ramadoss | Anbumani

அன்புமணியை அதிரடியாக நீக்க பாமக நிர்வாகிகளிடம் கையெழுத்தா? ராமதாஸ் திட்டமா? பரபரப்பு பேட்டி லோக்சபா தேர்தலில் பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்தது. இது, கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு பிடிக்கவில்லை. அதனால் இருவருக்குமு் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. அதைத் தொடர்ந்து, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாகவும், செயல் தலைவராக மட்டும் நீடிப்பார் எனவும் கடந்த சில வாரங்களுக்கு முன் ராமதாஸ் அறிவித்தார். ஆனால் அன்புமணியோ என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார். பொதுக்குழு மூலமாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனவும் கூறிய அன்புமணிக்கு பக்கபலமாக பல நிர்வாகிகள் இருக்கின்றனர். ராமதாஸ் தனது பலத்தை நிரூபிக்க திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தை அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இது, ராமதாசுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை தைலாபுரம் தோட்டத்துக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். அதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்தார். அவரிடம் அன்புமணியை நீக்க நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்குவதாக கூறப்படுகிறதே? அதற்காகத்தான் வரிசையாக கூட்டம் நடத்தப்படுகிறதா? என நிருபர்கள் கேட்டதற்கு மணி கூறியதாவது:

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !