குடும்பத்துக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்: ராமதாஸ் PMK Ramadoss| Saathanur dam| water released| Mid
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழகத்தில் நடப்பது மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு, சிந்திக்கும் திறனற்ற அரசு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தென் பெண்ணை ஆற்றில் நள்ளிரவு நேரத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்த பிறகுதான் அவர்களுக்கு விஷயமே தெரியவந்திருக்கிறது. உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்ற அளவில் உடமைகளை விட்டுவிட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை உடைமை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் இழப்புகளும் ஏராளம். இந்த பாதிப்புகளில் இருந்து அவர்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆக கூடும்.