உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தி படிக்க மகள் ஆசைப்பட்டது ஒரு தப்பா? | policeman | vijayasekaran suspended

இந்தி படிக்க மகள் ஆசைப்பட்டது ஒரு தப்பா? | policeman | vijayasekaran suspended

நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். வேட்டைக்காரனிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக உள்ளார். இவரது மகள் துவாரகா மதிவதனி, 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர், 30ம்தேதி வடக்கு பொய்கைநல்லுார், கோரக்கர் சித்தர் கோயிலுக்கு வந்த பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலையிடம், நம்ம மோடி தாத்தாகிட்ட சொல்லி நாகையில் நவோதயா வித்யாலயா பள்ளிக்கூடம் கட்டி தர சொல்லுங்க மாமா என, தனது கையால் எழுதிய அட்டையை வழங்கினார். உடனே அண்ணாமலை, குழந்தையை துாக்கி கொஞ்சினார். இந்தாண்டு ஜனவரி 2ம் தேதி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரை வரவேற்க அப்பாவுடன் சென்றார், துவாரகா மதிவதனி.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ