/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை! | Pollachi Case | Coimbatore Court | Pollachi Case
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை! | Pollachi Case | Coimbatore Court | Pollachi Case
பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் 2019ல் நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர். அவனுடைய செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் போன் நம்பர்கள் மூலம் மற்ற குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர்.
மே 13, 2025