/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத பிரஜ்வல் ரேவண்ணா | Prajwal Revanna | Dinamalar
தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத பிரஜ்வல் ரேவண்ணா | Prajwal Revanna | Dinamalar
பாலியல் பலாத்கார வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, குற்றவாளி என்று சிறப்பு கோர்ட் நீதிபதி கஜானன் பட் அறிவித்தார். வீட்டு வேலைக்காரப்பெண் அளித்த பாலியல் புகாரை விசாரித்த கோர்ட் இந்த தீர்ப்பு அளித்துள்ளது. வழக்குப் பதியப்பட்ட 14 மாதங்களில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்த பிரஜ்வல், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தீர்ப்பை கேட்டதும் அவர், கண்ணீர் விட்டு அழுதார்.
ஆக 01, 2025