உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆலோசகராக இருந்தவர் ஆட்சியை பிடிப்பாரா? prasanth kishore| bihar politics| Bjp

ஆலோசகராக இருந்தவர் ஆட்சியை பிடிப்பாரா? prasanth kishore| bihar politics| Bjp

பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்தவர், பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வின் ஆலோசகராக இருந்து, திமுகவை வெற்றிபெற செய்தவர். காந்தி ஜெயந்தி அன்று ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். இவருடைய கட்சியின் கொடியில் காந்தியும், அம்பேத்கரும் இடம் பெற்றுள்ளனர். அன்றே கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். எங்கள் கட்சி இடது பக்கமோ, வலது பக்கமோ போகாது. மனிதாபிமான பாதை தான் எங்கள் நோக்கம். பீஹாரை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் ஆக்குவோம். ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்வோம். கட்சியின் வேட்பாளர்களை மக்களே தேர்ந்தெடுப்பர். கட்சி தலைவராக இருப்பவரின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே; அனைத்து ஜாதியினருக்கும் தலைவராகும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த கட்சி, பாஜவின் பி டீம் என, பீஹாரின் மற்ற கட்சிகள் வர்ணித்தாலும், உள்ளுக்குள் பயந்து போயுள்ளன. காரணம், கட்சி துவக்குவதற்கு முன்பாக, கடந்த 2 ஆண்டுகளாக பீஹாரின், 6,000 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளார் பிரசாந்த். எனவே, இவருக்கு மக்களின், பல்ஸ் தெரியும்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை