துரைமுருகன் அந்தர் பல்டி அடித்த மர்மம் உடைந்தது | Rajini vs Duraimurugan | Rajini's old student rema
ஓல்டு ஸ்டூடன்ட் vs பல்லு போனவர் பகிரங்க மிரட்டலால் பணிந்த துரை பின்னணியில் நடந்த பஞ்சாயத்து அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை வைத்து நடிகர் ரஜினி சொன்ன நியூ ஸ்டூடன்ட் ஓல்டு ஸ்டூடன்ட் கதை பூகம்பத்தையே உண்டு பண்ணியது. ரஜினி, துரை முருகனின் தனிப்பட்ட சண்டையாக உருவெடுத்தது. பின்னர் 2 பேரும் சமாதான கொடியை பறக்க விட்டனர். துரை முருகன் சமாதானம் ஆனதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். மேடையில் திமுகவை பற்றி கலகலப்பாக பேசிய ரஜினி,சீனியர் மாணவர்கள் ரேங்க் வாங்கிய பின்னும், வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல என்றார். breath ரஜினியின் கலகலப்பான இந்த பேச்சை கேட்டு, மேடையில் இருந்த முதல்வர் உடப்ட பலரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இருப்பினும் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள் பலரின் முகம் வாடியது. பழைய மாணவர்கள் என மூத்த அமைச்சர்களை பொதுவாக விமர்சித்ததோடு நில்லாமல், குறிப்பாக துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு ரஜினி பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சால் கடும் கோபம் அடைந்த துரைமுருகன், அதை தன் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். மூத்த நடிகர்களுக்கு வயதாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து சாகப்போகிற நிலையிலும் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என அடுத்த நாளே காட்டமாக பதிலடி கொடுத்தார்.