ராகுலின் பொய் கடை: ராஜ்நாத் சிங் காட்டம் | Rahul Speech about India in USA | Rajnath Singh | BJP
ராகுல் பேச்சு வெட்கக்கேடு இந்தியா மாண்பை குறைக்கும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அமெரிக்காவின் விர்ஜினியாவில் பேசிய போது, மத்திய அரசு, பாஜ, இட ஒதுக்கீடு, இந்தியாவில் சீக்கியர்களின் நிலை, இந்திய - சீன எல்லை விவகாரம் என பலவற்றை பேசினார். ராகுலின் இந்த பேச்சுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இந்தியாவைப் பற்றி வெளிநாட்டில் அடிப்படை ஆதாரமற்ற பல கருத்துக்களை பேசி வருகிறார். இது, இந்தியாவின் மாண்பை குறைக்கும் செயல் மட்டுமல்ல; இது, வெட்கக்கேடான பேச்சும் கூட. இந்தியாவின் கலாசாரத்தை பேணிக் காப்பதில் சீக்கியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் மீது இந்த தேசம் அளவுகடந்த பாசமும், மரியாதையும் வைத்துள்ளது. அப்படிப்பட்ட சீக்கியர்கள் இங்குள்ள குருத்துவாராக்களில் தலைப்பாகை அணிந்து செல்ல சுதந்திரம் கிடையாது என ராகுல் பேசியதில் துளியளவும் உண்மை இல்லை. அப்படி பேசுவது அவரது பொறுப்புமிக்க பதவிக்கு கண்ணியம் ஆகாது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இடஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டு வரும் என ராகுல் பேசியுள்ளார். நம் நாட்டில் வசிக்கும் ஓபிசிக்கள், எஸ்சி, எஸ்டிக்கள் நலன் கருதி பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.