உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்? பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள் | Rajya Sabha Elections

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்? பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள் | Rajya Sabha Elections

தமிழகம், மஹராஷ்டிரா, ஒடிஷா, கர்நாடகா உட்பட 17 மாநிலங்களில், விரைவில் 72 எம்.பி.,க்களின் பதவி காலியாகிறது. இவர்களின் பதவிக்காலம் முடிந்த ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், பதவிக்காலம் முடியும் வரை, தேர்தல் கமிஷன் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்கூட்டியே, 2026 மார்ச் மாதமே தேர்தல் நடத்தப்படலாம். கடந்த 1991 முதல் 1996 வரையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி நடந்தது. அப்போது 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டது. இதுபோன்ற முன்னுதாரணங்கள் உள்ளதால், இந்த முறையும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழகம் ராஜ்யசபா தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் நடத்தினால் தான், தற்போது உள்ள தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பார்கள். அதேபோல், அ.தி.மு.க.,வுக்கு, இரண்டு எம்.பி., பதவிகள் கிடைக்கும். சட்டசபை தேர்தல் முடிந்த பின், ராஜ்யசபா தேர்தல் நடந்தால், கள நிலவரம் மாறும். அப்போது எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனரோ, அந்த கட்சிக்கு அதிக எம்.பி.,க்கள் கிடைக்கும் சூழல் உருவாகும். காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா எம்.பி., தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வும் அ.தி. மு.க.,வும் விரும்புகின்றன. இதற்கேற்ப, சட்டசபை தேர்தலுக்கு முன்பே, ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இதனால் ராஜ்ய சபா எம்பி பதவி கேட்டு பாஜ மற்றும் இண்டி கூட்டணியை சேர்ந்த கட்சிகள் பேரம் நடித்தி வருகின்றன. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளித்து, ராஜ்யசபா தேர்தலை சந்திப்பது என்பது, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RajyaSabha #TamilNaduElections #DMKAlliance #AIADMK #SeatAllocation #UpperHouseElections #DMK #Congress #BJP #TamilPolitics #AssemblyElections2026 #PoliticalStrategy #MPPosts #AllianceNegotiations #TamilNaduNews

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை