2 வழி தான் கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ராமதாஸ் | Anbumani | Ramadoss | PMK | PMK Case | TVK | Vijay
பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். அன்புமணி அதிமுக - பாஜ கூட்டணியில் இணைந்தார். ராமதாசால் எந்த கூட்டணியிலும் சேர முடியவில்லை. பாமக பெயர், கொடி, சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை சிவில் கோர்ட்டில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை மே 10ம் தேதிக்கு பிறகே விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது ராமதாசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. திமுக - அதிமுக மறுத்து விட்ட நிலையில் தவெகவுடன் சேர வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்ற இரு வழிகள் மட்டுமே அவருக்கு உள்ளன. கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தனிக்கட்சி துவங்கும் கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார். #Anbumani | Ramadoss | #PMK | #PMKCase | #TVK | #Vijay | #2026Election | #ElectionUpdate | #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #PoliticalStrategy #TamilNaduElections #AlliancePolitics #VoterEngagement #ElectionAnalysis #PoliticalNews #CurrentAffairs #SouthIndianPolitics #NDAvsDMK