திருமாவளவன் கருத்தை ஏற்க மறுத்த ராமதாஸ் | Ramadoss | PMK | Founder | Thirumavalavan
தமிழகத்தில் எந்த சூழலிலும், எந்த காலத்திலும் தலித் ஒருவர் முதல்-வராக முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாமக சார்பில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆக்கப்படுவார் என தலைவர் அன்புமணி கூறியிருப்பது தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இதுபோன்ற விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் என்றால், அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடம் இருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.