ரஷ்ய உளவு தலைமையகம் அருகே பகீர் சம்பவம் | Russian President | Vladimir Putin | Zelensky | Russia
புடின் கதையை முடிக்க நடந்த சதி கான்வாயில் வெடித்து சிதறிய கார் என்ன ஆனது ரஷ்ய அதிபருக்கு? ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பெற்ற டிரம்ப் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சவுதி அரேபியாவில் நடந்த பேச்சில், இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டது. ஆனால் சொன்ன வாக்கை மீறி இரு நாடுகளும் தொடர்ந்த தாக்குதல் நடத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் உக்ரைனை தற்காலிகமாக ஐநாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். அங்கு திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். உக்ரைனில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இப்படி மாறி மாறி இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் ரஷ்ய உளவுத்துறை தலைமையகம் அருகே புடின் கார் வெடித்து சிதறியது. புதின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அங்கு குவிக்கப்பட்டனர். நல்ல வேலையாக புடின் அந்த காரில் பயணிக்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த காராக இருந்த லிமோசின் கார் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடையது.