உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனி அந்த சொல்லை பயன்படுத்த முடியாது | Sandalar word | SC ST Commission order | Sandalar

இனி அந்த சொல்லை பயன்படுத்த முடியாது | Sandalar word | SC ST Commission order | Sandalar

சர்ச்சையான சண்டாளர் முடிவு கட்டிய அரசு! நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து பாடல் பாடினார். இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேட்டி அளித்த சீமான், சண்டாளர் என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், அதிமுக பிரசார பாடலில் இருக்கிறது; கந்த சஷ்டி கவசத்திலும் வருவதாகவும் கூறி இருந்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில், சண்டாளர் என்ற வார்த்தை விவாத பொருளான நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48வது இடத்தில் உள்ளது. சமீப காலமாக பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில், சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதை காணமுடிகிறது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை