உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்: பரபரக்கும் தென் தமிழகம் | OPS-Sasikala Alliance

தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்: பரபரக்கும் தென் தமிழகம் | OPS-Sasikala Alliance

பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைந்து செயல்பட்டால், தென் மாவட்டங்களில் ஓட்டுகள் பிரிந்து விடும் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, அ.ம.மு.க வட்டாரம் கூறியதாவது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது, அவரை வைத்தே அ.தி.மு.க.,வை கைப்பற்ற தினகரன் திட்டமிட்டார். ஆனால், அ.தி.மு.க.,வில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வர் என நம்பியதால், தினகரன் பேச்சை சசிகலா கேட்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த 2017ல் இருந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த தினகரன், இப்போது அவரை முதல்வராக்குவேன் என கூறி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். தென் மாவட்டங்களில் தினகரனின் பலம், முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் தான். அதனால், அவரை பலகட்ட பேச்சுக்கு பின், கூட்டணிக்குள் பா.ஜ., தலைமை கொண்டு வந்தது. ஆனால், பழனிசாமியுடன் தினகரன் கைகோர்த்ததை, அ.ம.மு.க., நிர்வாகிகள் பலர் ஏற்கவில்லை.

பிப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி