/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சீற்றம் குறையாத சங்கர் ஸ்டாலின், உதய் மீது தாக்கு Savukku sankar | Madurai prison
சீற்றம் குறையாத சங்கர் ஸ்டாலின், உதய் மீது தாக்கு Savukku sankar | Madurai prison
பெண் போலீசாரை அவதூறு பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகத்தின் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மே மாதம் தேனி அருகே போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கஞ்சா வைத்திருந்ததாகவும் தனி வழக்கு போட்டனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து அவதூறு பரப்பி மக்களை அரசுக்கு எதிராக போராட தூண்டியதாக அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டது. சங்கர் மீதான குண்டாசை ரத்து செய்ய கோரி அவரது தாய் கமலா ஐகோர்ட்டில் முறையிட்டார். 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
செப் 25, 2024