உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஷ்டத்துக்கு பேசக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு முழு விவரம் | Seeman ntk | Rajiv Gandhi | Madras High Cou

இஷ்டத்துக்கு பேசக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு முழு விவரம் | Seeman ntk | Rajiv Gandhi | Madras High Cou

4 முறை கோர்ட் படி ஏறட்டும் சீமானுக்கு ஐகோர்ட் சாட்டையடி கருத்து சுதந்திரமா? நீதிபதி அதிரடி உத்தரவு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி பேசினார். ராஜிவ் ஒரு இன துரோகி... தேச துரோகி என சீமான் பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ