சொன்னது வேறு! நடந்தது வேறு! செங்கோட்டையன் சென்றது எதற்காக? | Sengottaiyan | EPS | ADMK | Amit Shah 
                                                    
                                                      அமித்ஷா வீட்டில் 
செங்கோட்டையன்!
திடீர் டுவிஸ்ட்! 
முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமிக்கு 10 நாள் கெடு விடுத்தார்.
அடுத்த நாளே செங்கோட்டையனை அதிமுக பொறுப்புகளில் இருந்து பழனிசாமி நீக்கினார்.
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். 
செங்கோட்டையனுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழலில் இன்று அவர் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், கடவுள் ராமரை தரிசித்து விட்டு திரும்புவேன் என்றும் கூறி கிளம்பினார்.