பழனிசாமியை வீழ்த்த விஜயுடன் ஆலோசித்த செங்கோட்டையன் | Sengottaiyan | EPS | TVK Vijay | 2026 election
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைவதற்கு முன்பாக, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது செங்கோட்டையன் முக்கியமான 5 கோரிக்கைகளை நிபந்தனையாக வைத்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதும், தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையனை தொடர்பு கொண்டார். தவெகவில் சேர வலியுறுத்தி, பலமுறை போனில் பேசியுள்ளார். அப்போது, தவெகவில் இணைய, ஐந்து நிபந்தனைகள் உள்ளன. அதை விஜய் ஏற்றால் மட்டுமே தவெகவுக்கு வருவேன். அதற்கு முன், நடிகர் விஜயிடம் நேருக்கு நேர் பேச வேண்டும்; ஏற்பாடு செய்யுங்கள் என செங்கோட்டையன் சொல்ல, அடுத்த நாளே இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார் ஆதவ். இந்த தகவல் கிடைத்த பின், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். அதன்பின், சென்னையில் உள்ள விஜய் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார். முதல் 45 நிமிடங்கள் பொதுவான அரசியலை பேசிய செங்கோட்டையன், அடுத்ததாக தனது நிபந்தனைகள் குறித்து பேசியுள்ளார். #Sengottaiyan #EPS #TVK Vijay #2026 election #sengottaiyanmasterplan #edappadipalanisamy #admk #aadhavarjuna #tnpolitics #tnelection