உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செஷன்ஸ் கோர்ட் அவகாசம் வழங்க கடும் எதிர்ப்பு | Senthil balaji petition | Madras sessions court

செஷன்ஸ் கோர்ட் அவகாசம் வழங்க கடும் எதிர்ப்பு | Senthil balaji petition | Madras sessions court

விசாரணையை முடக்குவதே செந்தில் தரப்பின் நோக்கம் அமலாக்கத்துறை பாய்ச்சல் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்தது. ஓராண்டாக புழல் சிறையில் உள்ள அவர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செயது வந்தார். இந்த நிலையில், தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும்; ஆவணங்கள் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என செந்தில் தரப்பில் கடந்த வாரம் மேலும் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !