உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சசிதரூர் பதவி ஏற்றபோது நடந்த சம்பவம் | lok sabha | speaker om birla | Shashi Tharoor

சசிதரூர் பதவி ஏற்றபோது நடந்த சம்பவம் | lok sabha | speaker om birla | Shashi Tharoor

டென் ஷன் ஆன சபாநாயகர் காங்கிரஸ் எம்பிக்கு குட்டு திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசி தரூர் லோக்சபாவில் இன்று எம்பியாக பதவி ஏற்றார். ஆங்கிலத்தில் உறுதிமொழி வாசித்தார். பதவி ஏற்று முடித்ததும் வாழ்க அரசியல் சாசனம் என்றார். அப்போது, அரசியல் சாசனப்படிதான் நீங்கள் உறுதிமொழி எடுக்கிறீர்கள்... பிறகு எதற்கு கோஷம்? என்கிற ரீதியில் ஒரு கருத்தை சொன்னார் சபாநாயகர் ஓம் பிர்லா. உடனே காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூதா, அரசியல் சாசனம் வாழ்க என்றால் உங்களுக்கு என்ன பிரச்னை? இதற்கு நீங்கள் ஆட்சேபணை தெரிவிக்கக்கூடாது என்றார். காங்கிரஸ் எம்பியின் பேச்சால் சபாநாயகர் ஓம் பிர்லா பொறுமை இழந்தார்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை