உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் ஷீஷ் மஹால் Sheesh Mahal | Former CM Residence | BJP

டில்லியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் ஷீஷ் மஹால் Sheesh Mahal | Former CM Residence | BJP

கெஜ்ரிவால் தங்கிய ஷீஷ் மஹால் டில்லியின் மியூசியமாக மாறும் புதிய முதல்வர் அதிரடி பாஜ, காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து டில்லியில் ஆம் ஆத்மி அரசை நிறுவியவர் அரவிந்த் கெஜ்ரிவால். எண்-6, FLAGSTAFF சாலையில் உள்ள பங்களாவில் அவருக்கு முதல்வர் இல்லம் ஒதுக்கப்பட்டது. 2015 முதல் 2024 அக்டோபர் வரை அவர் அந்த பங்களாவில் வசித்தார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோதே வீடு புனரமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டது. 40 ஆயிரம் சதுர அடியில் சுமார் 45 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு வேலைகள் நடந்தன. பங்களாவை ஒட்டி இருந்த நான்கு அபார்ட்மென்ட் இடங்களும் அதனுடன் இணைக்கப்பட்டன. இந்த பங்களாவை ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையை நினைவுபடுத்தும் வகையில், பாஜ ஷீஷ் மஹால் என பெயரிட்டு அழைத்தது. டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஷீஷ் மஹால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பாஜ கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் ஷீஷ் மஹால் பிரச்னையை மக்களிடம் வீடியோ ஆதாரங்களுடன் கொண்டு சென்றனர். ஷீஷ் மஹால் வீடியோவுடன் பாஜ மேற்கொண்ட பிரசாரம் தேர்தல் முடிவுகளை மாற்றி, 27 ஆண்டுக்கு பிறகு பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்க உதவியது. புதிய முதல்வராக வருபவர் ஷீஷ் மஹாலில் தங்க மாட்டார். அந்த இடத்தின் பயன்பாடு குறித்து புதிய அரசு முடிவெடுக்கும் என்று பாஜ மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா கூறி இருந்தார். இதற்கிடையே ஷீஷ் மஹாலின் புனரமைப்பு பணிகள் குறித்து மத்திய விஜிலென்ஸ் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வெற்றிபெற்ற ஷாலிமர் பாக் தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா, டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்றார். முதல்வராக தேர்வானது பற்றி அவர் கூறுகையில், 27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. முதல்வராகும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, கட்சி தலைமை, டில்லி மக்களுக்கு என்னுடைய நன்றி. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை என் வாழ்நாள் குறிக்கோளாக நினைத்து செயல்படுவேன் என தெரிவித்தார். அவரிடம் கெஜ்ரிவால் தங்கிய முதல்வர் இல்லம் குறித்து கேட்டதற்கு, ஷீஷ் மஹால் மியூசியமாக்கப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ