இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஹசீனாவின் சோக கதை | sheikh hasina | bangladesh domestic violence | India
மாற்றுத்துணி கூட இல்லாமல் தப்பி வந்த ஷேக் ஹசீனா! திக் திக் இறுதி நிமிடங்கள்... வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியில்லாமல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா தப்பித்து வந்தார். ஷேக் ஹசீனாவும், அவரது தங்கை ஷேக் ரிஹானாவும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். அந்நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சியின் எம்பியாகவும் உள்ளார். ரெஹானாவுக்கும் பிரிட்டன் குடியுரிமை உள்ளது. எனவே தங்கையுடன் ஷேக் ஹசீனா லண்டனில் தங்க திட்டமிட்டுள்ளார் . மறுமுனையில், அவர்கள் இருவரையும் கைது செய்து வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்புமாறு அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கோரிக்கை வலுக்கிறது. ஷேக் ஹசீனாவை எப்படியாவது கைது செய்து, தண்டனை வாங்கி தர வேண்டும் என வங்கதேச மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், ஷேக் ஹசீனா தப்பிக்கும் முன் அரங்கேறிய இறுதி நிமிட சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. மாணவர்கள் போராட்டம் கையை மீறி போகும் நிலையில் கூட ஹசீனாவுக்கு, நாட்டை விட்டு தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.