டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பகீர் பின்னணி | Signal App | USA Army Secret | Donald Trump
ஒருத்தர் கூடவா கவனிக்கல? மொத்த ராணுவ ரகசியம் ஒரு கிளிக்கில் அலறுகிறது அமெரிக்க பாதுகாப்புதுறை காலை 11.44 இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் உறுதிசெய்துவிட்டது மதியம் 12.15 F16 போர் விமானங்கள் தாக்குதலுக்கு கிளம்பிவிட்டது மதியம் 1.45 போர் விமானங்கள் தாக்குதலை தொடங்கி விட்டது. MQ ட்ரோன்களும் ஏவப்படுகிறது மாலை 3.45 போர் விமானங்கள் இரண்டாவது தாக்குதலை தொடங்கிவிட்டது. போா் கப்பலில் இருந்து டமாஹாக் ஏவுகணை ஏவப்படுகிறது. இதெல்லாம் கேட்க தொலைக்காட்சி நிகழ்ச்சி வர்ணனை போல இருக்கலாம். இது தான் அமெரிக்காவில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. இப்போது ஏமனில் ஹவுதி கிளர்ச்சிப் படை தலைவர்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.