கருப்புக்கொடியுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்குள் செல்ல முயற்சி | Stalin camp | Farmers Association
நீ போலீசா ரவுடியா? வெயிலில் படுத்த சின்னதுரை கட்டில் கொடுத்த போலீஸ் நேற்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்த போது நேரில் சந்தித்து மனு கொடுக்க விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சி மாவட்ட சங்க தலைவர் சின்னதுரை காத்திருந்தனர். இருவரையும் போலீசார் வெளியே விடாமல் வீட்டு காவலில் வைத்தனர். இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இங்கு மாவட்ட விவசாய சங்க தலைவர் சின்னதுரை கருப்புக்கொடி மற்றும் சங்க கொடியுடன் சென்றார். போலீசார் அவரை கருப்புக்கொடியுடன் முகாமுக்குள் செல்ல தடை செய்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சின்னதுரை கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். 2 மணி நேரமாக தொடர்ந்து அவர் எந்திரிக்காததால் போலீசார் கயிற்று கட்டிலை போட்டு துணியால் மூடி வெயில் படாமல் மறைத்தனர்.