உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பணம், நகை பறித்த போலி சாமியார் குறித்து போலீசில் புகார்! Covai | Sundarapuram | Fraudulent

பணம், நகை பறித்த போலி சாமியார் குறித்து போலீசில் புகார்! Covai | Sundarapuram | Fraudulent

கோவை சுந்தராபுரம், சாரதா மில் ரோடு பகுதிக்கு கடந்த 14ம் தேதி, இரண்டு பெண்கள் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் இறங்க போவதாக கூறி நன்கொடை கேட்டனர். மாசாணியம்மன் மீது பக்தி கொண்ட பெண் ஒருவர், 200 ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். அவரிடம் பெண்கள் நைசாக பேச்சு கொடுத்தனர். உங்கள் குடும்பத்துக்கு ஆபத்து உள்ளது. வீட்டில் உள்ள கெட்ட சக்தியை நீக்க சில பூஜைகள் செய்ய வேண்டும். மாசாணியம்மன் கோயிலில் சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் வந்து பூஜை செய்தால் கெட்டதெல்லாம் நீங்கிவிடும் என கூறி, பெண்ணிடம் மொபைல் எண்ணையும் பெற்று சென்றுள்ளனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !