சிரியாவால் இந்தியாவுக்கு இவ்ளோ பிரச்சனையா? | Syria | Bashar Al Assad | syria rebels | India-syria
சிரியா தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர். 54 ஆண்டுகளாக அப்பா ஆசாத், மகன் ஆசாத் நடத்தி வந்த ஆட்சி கவிழ்ந்து விட்டது. கடைசி 24 ஆண்டுகளாக சிரியாவை ஆண்ட அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். அமைதியான முறையில் கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கும்படி உத்தரவு போட்டு விட்டு கிளம்பினார் என்று ரஷ்யா கூறியது. பஷர் அல் ஆசாத்தை பாதுகாப்பாக தப்பிக்க வைப்பதிலும், அவருக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் ரஷ்யா உதவி செய்துள்ளது. வெறும் பத்தே நாளில் சிரியாவின் நிலை தலைகீழாக மாறி விட்டது. நம் நாட்டில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிரியாவில் நடக்கும் விவகாரம் தானே என்று இந்தியா இதை எளிதில் கடந்து சென்று விட முடியாது. அங்கு நடக்கும் உள்நாட்டு போரும், அதிகார மாற்றமும் இந்தியாவின் சர்வதேச அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்க கூடியது. அப்படி சிரியாவுடன் இந்தியாவுக்கு எந்த விதமான உறவு இருந்தது? அங்கு நடக்கும் பதற்றம் எந்த வகையில் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.