காங். தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் எம்.பிக்கள் | Tamilnadu Congress MPs
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும், மகளிர் பிரிவு, ஊடகப் பிரிவு உள்ளிட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். முன்னாள் தலைவர் அழகிரியால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களில் சிலர் சரிவர செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் செல்வப்பெருந்தகை. சின்ன சேலம், தென் சென்னை, வட சென்னை கிழக்கு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும், இன்னும் கூட்டம் நடத்தப்படவில்லை. 15ம் தேதிக்குள் அந்த மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகள் பட்டியலுடன் மீண்டும் டில்லி செல்ல செல்வப்பெருந்தகை திட்டமிட்டிருக்கிறார். கட்சியில் மொத்தமுள்ள 77 மாவட்ட தலைவர்களில், இறந்து போன திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயகுமார் உட்பட, 8 மாவட்ட தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில், 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைவர் என 117 பேரை நியமிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.