ஆதாரம் இல்லாமல் டாஸ்மாக் ரெய்டில் இறங்கவில்லை | Tasmac | TN govt | mk stalin | ED
டாஸ்மாக் ஊழல்களுக்கு எதிரான விசாரணையை சீர்குலைக்க முயற்சி! தமிழக அரசுக்கு எதிராக ED காரசாரமான பதில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் அமலாக்கத்துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடத்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டது. ED ரெய்டை எதிர்த்து, டாஸ்மாக் மற்றும் அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என உத்தரவிடவும் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் திடீரென விலகினர். நீதிபதிகள் எஸ்எம் சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.