உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டாஸ்மாக் ஊழலில் ஆட்டத்தை ஆரம்பித்த ED | tasmac scam | ed tasmac raid | tn ed raid | senthil balaji

டாஸ்மாக் ஊழலில் ஆட்டத்தை ஆரம்பித்த ED | tasmac scam | ed tasmac raid | tn ed raid | senthil balaji

டாஸ்மாக் நிறுவனத்தில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதால், அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர்களுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் மது ஆலைகளில் இருந்து, மதுபானங்களை கொள்முதல் செய்து மாநிலம் முழுதும் 4,830 சில்லரை கடைகள் வாயிலாக விற்கிறது. இந்நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி