உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாணவிகள் வைத்த கோரிக்கை: உடனே ஓகே பண்ண உதயநிதி | Tasmac Shop | College Students | Deputy CM

மாணவிகள் வைத்த கோரிக்கை: உடனே ஓகே பண்ண உதயநிதி | Tasmac Shop | College Students | Deputy CM

உதயநிதி காரை சூழ்ந்து நின்று உண்மையை உடைத்த மாணவிகள் திருவாரூரில் சம்பவம் துணை முதல்வர் உதயநிதி திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நன்னிலம் அருகே மருதவாஞ்சேரியில் உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த காரில் சென்றார். அப்போது, மருதவாஞ்சேரியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவிகள், பெண்கள் சாலையோரத்தில் காத்திருந்தனர். உதயநிதி காரை நிறுத்தியதும் மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மருதவஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபான கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் தினமும் கஷ்டப்படுகின்றனர். குடித்து விட்டு மாணவிகளிடம் வம்பு செய்வது தொடர்கதையாக நடக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லை. இந்த கடைக்கு நீங்கள்தான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என, மாணவிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இன்னைக்கு நீங்க வர்றதால அதிகாரிகள் கடையை மூடி வச்சிருக்காங்க எனவும் மாணவிகள் உண்மையை போட்டுடைத்தனர். மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்த உதயநிதி, மதுக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மோகனசந்திரனிடம் கூறினார். கலெக்டர் உத்தரவின் பேரில் மருதவஞ்சேரியில் டாஸ்மாக் கடை நேற்றே மூடப்பட்டது. இதனால் அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை