அரசியலமைப்பு மீதான காங்கிரஸ் தாக்குதல் அப்பவே தொடங்கிடுச்சு tejasvi surya| katchatheevu|constitution
லோக்சபாவில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூரு தெற்கு தொகுதி பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா லோக்சபாவில் பேசும்போது, கச்சத்தீவை விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் முகத்திரையை கிழித்தார். சபையில் அவர் பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான காங்கிரசின் தாக்குதல், அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 1மீது இருந்தே தொடங்கி விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு, 1974ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், காங்கிரஸ் மற்றும் திமுகவால் எப்படி இலங்கைக்கு தரப்பட்டது என்பதை அறிய நாட்டின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவு பற்றி, அப்போதைய பிரதமர் நேருவிடம் கேட்கப்பட்டது. அவர் என்ன சொன்னார் என்றால், அந்த சிறிய தீவுக்காக நான் முக்கியத்துவம் தரப்போவதில்லை. அதன் மீதான உரிமையை விட்டுக்கொடுக்கவும் எந்த தயக்கமும் இல்லை என்றார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவு பற்றி நேருவின் நிலை இதுதான். மதசார்பின்மை, அரசியல் அமைப்பு நெறிமுறை பற்றி நமக்கு பாடம் நடத்தும் திமுகவும், கச்சத்தீவு விவகாரத்தில் கைகேர்த்து உள்ளது. 1974ல் அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது பற்றி நன்றாகவே தெரியும். இருந்தும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு அவர்கள் அதரவாக இருந்தனர்.