தேஜஸ்வி தொகுதியில் கடைசி நொடி வரை திக் திக்: நடந்தது என்ன? | Tejaswi Yadav | Bihar election | Raghop
பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணி மோசமான தோல்வி அடைந்துள்ளது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட தேஜஸ்வி யாதவே ரகோபூர் தொகுதியில் போராடி தான் வெற்றி பெற்றுள்ளார். 2015 முதல் இந்தத் தொகுதியில் அவர் எம்எல்ஏ ஆக இருந்து வருகிறார். அதற்கு முன்பு இந்தத் தொகுதியில் இருந்து அவரது தந்தை லாலு மற்றும் தாயார் ராப்ரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் தேஜஸ்வி 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இதனால், இந்த முறை அவர் எளிதாக வெற்றி பெறுவார் என ஆர்ஜேடி தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்த முறை பாஜ சதிஸ்குமார் யாதவ் என்பவரை களமிறக்கியது. இவர் 2010 தேர்தலில் இந்த தொகுதியில் ராப்ரி தேவியை தோற்கடித்தவர். இந்த கடும் போட்டிக்கு மத்தியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியும் களமிறங்கியது. இது போதாது என்று, தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப்பும் ஜன்சக்தி ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கி இந்தத் தொகுதியில் சகோதரருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கினார். #TejaswiYadav #BiharElections #RaghopurVictory #RJD #BiharPolls #TejaswiWins #LaluLegacy #BiharAssembly