உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராஜ்யசபாவில் எம்பி தம்பிதுரையின் நச் பாயிண்ட்கள் | Thambidurai Remarks | Rajyasabha | Congress

ராஜ்யசபாவில் எம்பி தம்பிதுரையின் நச் பாயிண்ட்கள் | Thambidurai Remarks | Rajyasabha | Congress

கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் பாஜ மீது பழி சுமத்த வேண்டாம் தம்பிதுரை விளாசல் ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். இந்த பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தும் தமிழக அரசு கூடுதல் நிதியை கேட்கிறது. காங்கிரஸ் கட்சியில் இரண்டு பொய்யர்கள் உள்ளனர். ஒருவர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். மற்றொருவர் முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல். கபில் சிபல் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார். சிதம்பரம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது யார்? 1976ல் எமர்ஜென்சி காலத்தில் தான் மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் பின் பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக ஏன் எதுவும் செய்யவில்லை. அதே போல் நீட் தேர்வை கொண்டு வந்ததும் காங்கிரஸ் கட்சிதான். இப்போது வேண்டாம் என சொல்லும் திமுகவும், காங்கிரசும் அப்போது எங்கே போனார்கள். இவர்கள் கொண்டு வந்து விட்டு பாஜ கூட்டணி மீது பழி சுமத்த பார்க்கிறார்கள். தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட 200 நாட்களில் 585 கொலைகள் நடந்து உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றார்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை